பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்
- திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்.
- ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலின் உண்டியல் கடந்த 16-ந்தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து துப்பு கிடைக்காததால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர்.
வாகையூர் அருகேயுள்ள ஆக்கனூர் கிராமத்தில் ஓடை உள்ளது. இதனை சுற்றியுள்ள நிலங்களில் களை எடுக்க பெண்கள் சென்றனர். அப்போது ஓடை அருகே உடைந்த நிலையில் ஒரு உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியல் மீது வாகையூர் செல்லியம்மன் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து வாகையூர் கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், உண்டியலை ஆக்கனூர் ஓடை அருகே வீசி சென்றிருக்கலாம் என கிராம பிரமுகர்கள் அனுமானித்தனர். இதையடுத்து ஓடையில் இருந்த உண்டியலை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.