உள்ளூர் செய்திகள்

வாய்க்கால் மண் அகற்றம் குறித்து என்.எல்.சி. விளக்கம்

Published On 2023-08-02 07:45 GMT   |   Update On 2023-08-02 07:45 GMT
  • பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
  • தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதிக்கு செல்கிறது

நெய்வேலி,ஆக,2-

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், வளையாமாதேவி பகுதியில் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியில் அகற்றப்படும் மண், சுரங்கம்-2 மேல்மண் கொட்டும் இடத்தில் கொட்டப்படுவதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளையமாதேவி பகுதியில் பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

என்.எல். சி. சுரங்க நீர், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறும் நீரையும் கையாளும் வகையில் நிரந்தர மாற்றுப்பாதையானது அமைக்கப்படுகிறது. இந்த பணியில் தோண்டப்பட்ட மண் அருகே உள்ள வயல்களில் கொட்டி பயிர்களைச் சேதப்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுகிறது. தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதியில் மேல் மண் கொட்டும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News