உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் வடகிழக்கு பருவமழை உதவி மையங்கள்

Published On 2023-11-17 10:00 GMT   |   Update On 2023-11-17 10:00 GMT
  • வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ஈஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகள், வாய்க்கால்கள் சீரமைப்பு, பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள இடையூறுகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகள் உரிய தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பிரச்சனைகளான வயலில் நீர் தேங்குதல், வடிகால் பிரச்சனைகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்த தகவல்களை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தொடர்பு எண் விவரம்:

தஞ்சாவூர் - 6379399728, பூதலூர் - 9443336758, திருவையாறு - 8189956026, ஒரத்தநாடு - 9942237587, திருவோணம் - 9600082492, பட்டுக்கோட்டை - 8526062230, மதுக்கூர் - 9943387147, பேராவூரணி - 6381918376, சேதுபவாசத்திரம் - 9443785789, பாபநாசம் - 7904069083, அம்மாப்பேட்டை - 9344072899, கும்பகோணம் - 8754243626, திருவிடைமருதூர் - 9751786010, திருப்பனந்தாள் - 9444846155, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் - 04362 - 267679 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்ப ட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News