உள்ளூர் செய்திகள்

முகாமில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.

சாயர்புரம் அருகே திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2023-03-21 08:58 GMT   |   Update On 2023-03-21 08:58 GMT
  • 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.
  • விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார்.

சாயர்புரம்:

சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் திருப்பணி செட்டிகுளத்தில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் நலப்பணி மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.

நிகழ்ச்சிக்கு தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார்.

விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார். வளசகாரன்விளை டாக்டர் ஜெபராஜ் மற்றும் திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் ரஜினி, எபனேசர், கமலேஷ், திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் சரளா, செயலாளர் இந்துமதி, மற்றும் மாணவ- மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.

Tags:    

Similar News