காயல்பட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
- காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அருணாசலபுரத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.
- முகாமின் போது சுகாதாரப்பணிகளை செய்தல், இலவச மருத்துவ முகாம், பனை விதைகள் நடுதல் ஆகியவை நடந்தன.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அருணாசலபுரத்தில் 7 நாட்கள் நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர்.
இந்த முகாமின் போது இல்லங்கள் தோறும் புள்ளி விவரங்களை சேகரித்தல், சுகாதாரப் பணிகளை செய்தல், இலவச மருத்துவ முகாம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம், கால்நடை மருத்துவ முகாம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பனை விதைகள் நடுதல் ஆகியவை நடந்தன.
முகாம் நிறைவு விழா நடைபெற்றது. பள்ளியின் ஆட்சி மன்ற தலைவர் அஷ்ரப் தலைமை தாங்கினார். தாளாளர் முகம்மது லெப்பை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் வரவேற்று பேசினார். கணினி ஆசிரியர் ஆசாத் ஜவகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சித்தீக், தமிழ் ஆசிரியர் முகம்மது இஸ்மாயில், அருணாச்சல புரம் தேசிய தொடக்கப் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், தலைமையாசிரியை சுகந்தி பால்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சேக் பீர்முஹம்மது காமில், ஆசிரியர் ராமச்சந்திரன், ஆவண எழுத்தர் மகாராஜன், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சங்கர் செய்திருந்தார். தமிழ் ஆசிரியர் சின்னத்துரை நன்றி கூறினார்.