உள்ளூர் செய்திகள்

போதிய இடவசதி இல்லாததால் ஆலந்தூர் மண்டல குழு கூட்டத்தில் நின்றபடி பங்கேற்ற அதிகாரிகள்

Published On 2023-11-10 09:57 GMT   |   Update On 2023-11-10 09:57 GMT
  • அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
  • கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலந்தூர்:

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் 12-வது மண்டல அலுவலகம் ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் செயல்பட்டு வந்தது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இங்கு போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில் ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் இன்று தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்கள் மற்றும் மண்டல அதிகாரி சீனிவாசன் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அதிகாரிகள் கூட்டத்தில் நின்றபடி பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு அதிகாரிகளுக்கு தனியாக நாற்காலிகள் கொண்டுவரப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News