உள்ளூர் செய்திகள்

சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளிய காட்சி.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டுபாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

Published On 2023-01-02 05:20 GMT   |   Update On 2023-01-02 05:20 GMT
  • பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
  • அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள

பாகல்பட்டியில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவ வைபவம் நடை பெற்றது . இதில் சென்றாய பெருமாள் சமேத லட்சுமி அம்மாள் மற்றும் துளசி அம்மாள் கல்யாண வைப வம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சென்றாய பெரு மாள் சுவாமி மாப்பிள்ளை கோலத்திலும் மற்றும் ஸ்ரீ லட்சுமியம்மாள் ஸ்ரீ துளசி அம்மாள் மண மகள் கோலத்திலும் அலங்க ரிக்கப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்பட்டு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

இதில் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுக்களித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு

பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பாகல்பட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று தொளசம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலிலும், ஓமலூர் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News