கல்குவாரிக்கு எதிர்ப்பு: நடந்தை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்
- பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு
களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.
தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ
நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.