உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பேசிய போது எடுத்த படம்.

கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு: அ.தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடத்த முடிவு

Published On 2023-04-24 08:58 GMT   |   Update On 2023-04-24 08:58 GMT
  • தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
  • அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மூலம் பொதுநல வழக்கு தொடங்கப்பட உள்ளது.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், அவைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு எதிராக அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க.வும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

செங்கோட்டையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் கனிம வளங்களுக்கு எதிராக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மூலம் பொதுநல வழக்கு தொடங்கப்பட உள்ளது எனவும் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தெரிவித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் ,தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது கனிம வளங்கள் ஒரு யூனிட் கூட கேரளாவிற்கு கடத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது தினமும் 4500 முதல் 5000 யூனிட் வரை கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க. சார்பில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தென்காசி மாவட்டத்தில் நடத்தப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News