உள்ளூர் செய்திகள்

நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவிய கண்காட்சி நடந்த போது எடுத்தபடம்.


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓவிய கண்காட்சி

Published On 2022-10-10 09:12 GMT   |   Update On 2022-10-10 09:12 GMT
  • மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.
  • கண்காட்சியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி ஓவியர்கொண்டைய ராஜுவின் நினைவாகவும், கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதனை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அ.ஷன்மதி, அ.ரித்தீஷ்ராம், கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., ஓவியர் எஸ்.கார்த்திகை செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள், சித்திரம் கலைக்கூட மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.

மேலும் ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம், போஸ்டர் கலர் ஓவியங்கள், பென்சில், பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மெட்டல் எம்பாஸ்ஸிங் மற்றும் நெட்டி வேலைப்பாடு உள்ளிட்ட அறிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

சித்திரம் ஓவியர் எஸ்.கார்த்திகைசெல்வத்தின் ஓவிய மாமேதை கொண்டையராஜு ஓவியக்கலை சொல்லும் கோவில்பட்டி என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வெளியிட எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்களான சீனிவாசன், ஞானகுரு, முருகபூபதி, வேல்முருகன், ஜெயக்குமார், சோமசுந்தரம், மோகன்குமார், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காலண்டர் ஓவியர்களான செந்தியப்பன், பாஸ்கர், மாரியப்பன், கண்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர்கள் காளிதாசமுருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி), வக்கீல் சம்பத்குமார், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி துறைப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சித்திரம் கலைக்கூட ஓவியர் கார்த்திகை செல்வம், கலைக்கூட ஓவிய மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News