பக்ரீத் பண்டிகை- கோவையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்தது
- அதிக விலைக்கு விற்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 3 நாட்களில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
கோவை,
நாடு முழுவதும் வருகிற 29-ந் தேதி இஸ்லாமிய மக்களின் தியாக திருநா ளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்து ஏழை- எளிய மக்கள் மற்றும் உறவி ர்களுக்கு வழங்குவது வழக்கம்.
இதற்காக கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம், கோட்டைமேடு, புல்லுக்காடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.
மேலும் பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் ஆடுகளின் விலை ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-
கோவை மாநகர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப னைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்சம் இந்த 3 நாட்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
கோவை உக்கடம் போத்தனூர் கரும்புக்கடை கோட்டைமேடு பொன் விழா நகர் போன்ற பகுதிகளில் ஆடு வியா பாரம் சூடு பிடித்து ள்ளது. தமிழகத்தில் செம்பட்டி, மதுரை, திண்டுக்கல், பல்லடம் போன்ற சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்ப னைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆட்டுக்குத் தேவையான புல் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டுவர ப்பட்டன. இந்த புல்லின் விலை ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.