உள்ளூர் செய்திகள்
உவரி கடற்கரையில் பனைவிதைகள் விதைப்பு
- சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர்.
திசையன்விளை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி சார்பில் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேஜர்ராஜன் தலைமை தாங்கினார். உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், கல்லூரி தமிழ் துறை தலைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.