உள்ளூர் செய்திகள்

கடையம் யூனியன் பஞ்சாயத்து கூட்டமைப்பு கூட்டம் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற காட்சி.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்- பஞ்சாயத்து கூட்டமைப்பில் தீர்மானம்

Published On 2022-11-21 09:04 GMT   |   Update On 2022-11-21 09:04 GMT
  • கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

கடையம்:

கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் 14 -வது கூட்டம் யூனியன் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார்.மூத்த தலைவர்கள் அழகு துரை, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமது உசேன் வரவேற்றார். கூட்டத்தில், ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள நிதி பற்றாக்குறையை தமிழக அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும், கலைஞர் வீடு, பிரதமர் வீடு, இலவச ஆடு, மாடு ஆகியவற்றை வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும், குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளையும் மற்றும் அனுமதிச்சீட்டு ஆய்வு ,அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொட்டல் புதூர் கணேசன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, கீழாம்பூர் மாரிசுப்பு, மேலாம்பூர் குயிலி லட்சுமணன்,திருமலையப்பபுரம் மாரியப்பன், பாப்பான்குளம் முருகன், தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன் , மந்தியூர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News