உள்ளூர் செய்திகள்

ஈமச்சடங்குகள் செய்ய தென்பெண்ணை ஆற்றங்கரையில் திரண்ட பொதுமக்கள்.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

Published On 2022-09-16 09:25 GMT   |   Update On 2022-09-16 09:25 GMT
  • கனமழை பெய்து வந்ததால் காவிரியில் 2 மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்தனர்.

தருமபுரி,

தமிழகத்தில் இந்து முறைப்படி இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்வது வழக்கம். இந்த சடங்குகளை ஆற்றங்கரையிலும் ஊரின் குளக்கரைகளிலும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இறந்தவர்களுக்கு தர்பணம் செய்து வந்தனர்.

தற்பொழுது தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் காவிரியில் 2 மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கும், இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்வதற்கும் தடை விதித்து உள்ளனர்.

எனவே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் 2 மாவட்ட எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தினசரி இறந்தவர்களுக்கு ஈம சடங்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து தங்களின் முன்னோர்களுக்கு ஈம காரியங்களை செய்தனர்.

Tags:    

Similar News