உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-10-08 07:33 GMT   |   Update On 2023-10-08 07:33 GMT
  • காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
  • மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காமலாபுரம், சக்கையனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது இந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காமலாபுரம் மற்றும் சக்கையநாயக்கனூர் பகுதியில் சீரான மின் வினியோகம் இல்லை. மேலும் குடிநீரும் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து அதிகாரிகளி டம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று செம்பட்டி-கொடைரோடு செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா, கருப்பையா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சீரான மின்வினியோகம் மற்றும் குடிநீர் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News