காயல்பட்டினம் நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி தொடக்கம் - 465 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார்.
- இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.
ஆறுமுகநேரி:
தமிழகத்தின் 138 நகராட்சி களில் தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இவற்றில் காயல்பட்டினம் நகராட்சியும் ஒன்று ஆகும்.
காயல்பட்டினம் நகராட்சி யின் சார்பில் ஜலாலியா மண்ட பத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மாவட்டத் தொழில் துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்பட 18 அரசு துறையினர் கலந்துக்கொண்ட னர்.
இதில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கணினி மூலம் அனுப்பி ரசீது வழங்கப்பட்டது. இதன் மூலம் 465 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்தும் முதல்- அமைச்ச ரின் நேரடி பார்வைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டன. அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார். இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடை ந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சொர்ணலதா, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலெட்சுமி, நகராட்சி மன்ற தலைவர் முத்துமுகம்மது, துணை த்தலைவர் சுல்தான்லெப்பை, ஆணை யாளர் குமார்சிங், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினரும் நகராட்சி கவுன்சிலருமான ரெங்கநாதன் என்ற சுகு, ஆறுமுகநேரி பேரூராட்சி துணை த்தலைவர் கல்யாணசுந்தரம், மின்வாரிய செயற்பொறியாளர் இளங்கோ வன், மேற்பார்வை யாளர் குருவம்மாள், சாகுபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி மின்பொறியாளர் ஜெபஸ்சாம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீதுஹீல்மி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெப்சிபா லைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டர் ரகுமான் தொகுத்து வழங்கினார்.
இதன் பிறகு காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழ லட்சுமிபுரம் ஆதிதிராவிடர் நல விடுதி ஆகிய இடங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.