உள்ளூர் செய்திகள்

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-04 08:28 GMT   |   Update On 2023-11-04 08:28 GMT
  • ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
  • மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு, மாவட்ட துணை செயலாளர் பிச்சமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சாமிநாதன், விவசாய அணி மாவட்ட செயலாளர் குணசேகரன்,

ஒன்றிய பொருளாளர் நலமுத்து மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெயராமன், பேரவை இணை செயலாளர் தேவா மற்றும் இந்த கூட்டத்திற்கு இரவாங்குடி பாப்பாக்குடி ஏ.என்.பேட்டை, பட நிலை, காடுவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News