ரோவர் கல்வி குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
- ரோவர் கல்வி குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது
- பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றி கூறினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் ரோவர் கல்வி குழுமத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் பெரு–விழா கோலாகலமாக கொண்டா–டப்பட்டது. இவ்விழாவிற்கு ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன் மற்றும் துணைதலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகி–யோர் தலைமை தாங்கி–னர். அறங்காவலர் மகாலட் சுமி வரதராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றியும், யார் உங்களின் ஊக்கம் அளிப்பவர், உச்சா–கப்படுத்துபவர் என்பதை கண்டறிவதை பற்றியும், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ரோவர் கல்வி குழும தலைவர் வரதரா–ஜன் திருக்குறளின் பெருமை–யையும், இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் பற்றியும் மேலும் மூடநம்பிக்கைகளா அல்லது அறிவியலின் உச்சமா என்பது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். அலுவலக மேலாளர் ஆனந்த் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வி–ழாவில் ரோவர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், அலுவலக மேலா–ளர்கள் ஆசிரிய பெரு–மக்களும் அலுவலக ஊழி–யர்களும் கலந்து கொண்டனர்.