உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடும் சுங்கசாவடி ஊழியர்களுக்கு இடையூறு செய்ய கூடாது - நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-10-15 10:09 GMT   |   Update On 2022-10-15 10:09 GMT
  • சுங்கச்சாவடியில் ஆட்குறை–ப்பு நடவடிக்கை–க்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது.

பெரம்பலூர்,

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை மற்றும் உளுந்தூர் பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள், இரண்டு சுங்கச்சாவடிகளிலம் தற்போது என்ன நிலவரம் உள்ளதோ அதன்படியே வாகனங்கள் சென்று வர வேண்டும். நிர்வாகம் புதிய ஆட்களை பணியமர்த்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் அமைதி வழியிலேயே போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News