பெரம்பலூர் அயன்பேரையூரில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
- அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் வி.களத்தூர் கால்நடை உதவி மருத்துவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்கம், மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.