உள்ளூர் செய்திகள்

கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

Published On 2023-11-08 07:57 GMT   |   Update On 2023-11-08 07:57 GMT
  • பெரம்பலூர் கல்குவாரி சம்பவத்தில்கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
  • மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு

பெரம்பலூர்,  

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவரும், கவுள்பா ளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச் செல்வன், அவரது சகோ தரர் முருகே சன், பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத்தலைவர் பி.முரு கேசன் ஆகியோரை தி.மு.க. வினர் தாக்கினர்.

மேலும், டி.எஸ்.பி. பழனி சாமி உள்ளிட்ட போலீஸார், உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி னர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் - சுரங் கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத் தார்.

புகாரின் பேரில், போலீ சார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவரான கே.அன்பழகன், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரான ஆர்.அன்புச்செல் வன் உள்பட தி.மு.க. நிர்வா கிகள் 13 பேரை கடந்த 1-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான 13 பேர் மற்றும் இதே வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த மகேந்திரன், தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட செயலாளர் ரமேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்பட 6 பேர் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஜாமீன் மனுக்களை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெ ழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

இதே சம்பவம் தொடர் பாக மேலப்புலியூர் கிரா மத்தை சேர்ந்த தி.மு.க. தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆர்.ரமேஷ் என்பவர் தான் டெண்டர் போட வரும் போது தகாத வார்த் தையால் திட்டி, கைகளால் தாக்கி, கொலை செய்வோம் என மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செ.கலை செல்வன், பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்டத்தலைவர் பி.முருகேசன், செ.முருகே சன் ஆகியோர் மீது பெரம்ப லூர் போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

Tags:    

Similar News