உள்ளூர் செய்திகள் (District)

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

Published On 2024-08-08 06:25 GMT   |   Update On 2024-08-08 06:25 GMT
  • ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது.
  • பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

ஒகேனக்கல்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் ஒகேனக்கலில் வரலாறு காணாத அளவு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

ஆற்றில் வினாடிக்கு 2.30 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கடந்த 23 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால். ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்த இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து ஒகேனக்களுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீடிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடித்து பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் மற்றும் சகிலா ஆகியோர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News