உள்ளூர் செய்திகள்

கோவில் நிலத்தை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு

Published On 2024-07-15 08:16 GMT   |   Update On 2024-07-15 08:16 GMT
  • முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
  • சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது.

திருப்பூர்:

திருப்பூர் அறிவொளி நகர், ராக்கியாபட்டி, ஈட்டி வீரம்பாளையம், முட்டியங்கிணறு, ஊஞ்சப்பாளையம், பரமசிவம்பாளையம் மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சியில் உள்ள செல்வமுத்துகுமாரசாமி ஆலயத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது. 2 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சேர்ந்து சிறப்பாக வழிபாடு செய்து வணங்கி வருகிறோம். இந்த கோவில் அமைந்துள்ள இடத்தை வேறு எந்த அரசு பயன்பாட்டிற்கும் வழங்காமல் இந்த கோவிலில் தொடர்ந்து எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு தங்களை கேட்டுகொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News