மீட்கப்பட்ட சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர மனு
- கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
- தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.
எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-
சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.