உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. நகர செயலாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2024-09-24 01:42 GMT   |   Update On 2024-09-24 01:42 GMT
  • நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓட்டம்.
  • போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சைக்கனி வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News