திட்டச்சேரியில், புகைப்பட கண்காட்சி
- 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் உள்ளன.
- 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள் ஆகியவைகளும் உள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் தலைவர்களின் மணல் சிற்பம், கலைஞர் கருணாநிதியின் சிறு வயது முதல் தற்போது வரை உள்ள புகைப்பட கண்காட்சி, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சேரர், சோழர் காலத்து நாணயங்கள் 150 ஆண்டுகள் பழமையான சூடு மண் பானைகள், 100 ஆண்டுகள் பழமையான சாவிகள், எடை கற்கள் 18-ம் நூற்றாண்டு பொற்காசுகள்,
பல்வேறு நாடுகளின் கரன்சிகள், கடல் வாழ் உயிரினங்களின் கல் படிமங்கள், சுண்ணாம்புக் குடுவைகள் ஆகிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.மேலும் வரைபட கண்காட்சி, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறுவர் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ராக்போர்ட் ஈவன்ட் சார்பில் அதன் நிர்வாகி ஜெய் கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் சகுந்தலாதேவி, பழனிவேல் சரத்குமார், செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.கண்காட்சிக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.