லிப்ட் கொடுப்பது போல் நடித்து நகை பறிப்பு; ஒருவர் கைது
- நான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன் என்றார்.
- தங்க நகைகளை அந்த நபர் எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45) வயது இவர் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பஸ்ஸில் திரும்பி ஊருக்கு வந்தார்.
அப்போது பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்மநபர் அவரிடம் பேச்சு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து தான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன். என்னுடன் மோட்டார் சைசக்கிளில் வாருங்கள் என்று கூறினார்.
இதை நம்பிய கனகராஜ் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
மோட்டார் சைக்கிளில் அலிவலம் என்ற இடத்தின் அருகே சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக இருவரும் இறங்கினர்.
அப்போது கனகராசிடம் இருந்த தங்க நகைகளை அந்த நபர் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் இது குறித்து உடனடியாக ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு
பிரசன்னாவுக்கு தகவல் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பெயரில் பாப்பா நாட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வன் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் அதிரடிப்படை ராஜா சின்னத்துரை ஜெகன் உள்ளிட்ட படையினர் அதிரடியாக செயல் பட்டு நகையை பறித்த கொள்ளையனை மடக்கி பிடத்தனர்.
விசாரணையில் அவர் வட்டாத்தி கோட்டை தோப்பநாயக்கத்தைச் சேர்ந்த சித்திரைவேல் (42) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
துரிதமாக செயல் பட்ட குற்றபிரிவு போலீசாரை
போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.