யானைகள் வெளியேறுவதை தடுக்க ரூ.2 கோடி மதிப்பில் தடுப்பு நடவடிக்கைகள்
- காப்பு க்காட்டில், 130 ஹெக்டேரில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
- காடுகளில் அடர்த்தி அதிகரிக்க, 76 லட்சத்து, 64 ரூபாய் மதிப்பில், 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி,
வனத்தில் இருந்து யானைகள் வெளியேறு வதை தடுக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு உள்ளது என, தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-
தருமபுரி மாவட்ட வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வனவிலங்குள், மனித மோதலை தடுக்க வும், விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இதன் படி காப்பு க்காட்டில், 130 ஹெக்டேரில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்க, 39 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய யானை தாண்டா அகழி, 5 கி.மீ., துாரத்துக்கு அமைக்கவும், ஏற்கனவே உள்ள அகழிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தரம் குன்றி காடுகளில் அடர்த்தி அதிகரிக்க, 76 லட்சத்து, 64 ரூபாய் மதிப்பில், 5 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 26 லட்ச ரூபாய் மதிப்பில் சோலார் மின்வசதியுடன் ஆழ்துளை கிணறு மற்றும் அகலி அமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.