சரவணம்பட்டியில் தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து
- கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
- 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர்.
கோவை
கோவை போத்தனூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது29). இவர் கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ஸ்டீபன் ராஜ் தனது நண்பர்களை சந்திப்பதற்காக கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
அப்போது திடீரென ஓட்டல் அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் ஸ்டீபன் ராஜின் முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தகராறு செய்தனர்.
அப்போது அவர்களு க்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்தனர்.
அந்த கும்பலில் ஒருவன் கத்தியால் ஸ்டீபன் ராஜின் தலையில் குத்தினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த ஸ்டீபன் ராஜை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் கும்பல் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.