உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த மாணவர்களுக்கு பரிசு

Published On 2023-11-10 09:53 GMT   |   Update On 2023-11-10 09:53 GMT
  • வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்
  • வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான வளர் இளம்பருவ மாணவ- மாணவிகளுக்கான வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் போட்டியில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்:-

மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய அரிசி, தானியங்கள், இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.

வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.பின்னர், வட்டார திட்ட அலுவலர் அபிநயா பங்கேற்று பேசுகையில்:-

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்து பராமரிப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த 5 மாணவர்களை தேர்வு செய்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும் என்றார்.

நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், வட்டார மேற்பார்வை யாளர்கள் கமலா, ரேணுகா, சந்திரா, ஊட்டசத்து ஒருங்கிணை ப்பாளர் ராஜவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News