பெரியார் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
- கல்லூரி மாணவர்களி டையே நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க பெரியார் பிறந்தநாளை யொட்டி உரிய வழிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 36 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மாணவன் ரித்தீஸ் முதலிடம், மாணவி சாதனா 2ம் இடம், மாணவன் பாலாஜி 3ம் இடம் பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு பிரிவில் மாணவி ஹேமலதா மற்றும் மாணவி ஹரிணி ஆகியோர் சிறப்புப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களி டையே நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மாணவர் பிரிட்டோ முதலிடம், மாணவி பொன்மணி 2ம் இடமும், மாணவி யோகஸ்வரி 3ம் இடமும் பெற்றனர்.
இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பிரிவில் சிறப்புப் பரிசு தலா ரூ.2000 என்ற வகையில் காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் விசாகன் வழங்க உள்ளார்.