உள்ளூர் செய்திகள்

கேம்பலாபாத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.அருகில் ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர் உள்ளார்.

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் ரூ.48.14 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.ஏல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-06-24 08:39 GMT   |   Update On 2023-06-24 08:39 GMT
  • ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தென்திருப்பேரை:

முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் கேம்பலாபாத்தில் ரூ.38.14 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார். மேலும் தேமாங்குளம் ஊராட்சி மானாட்டூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. ஆதிநாதபுரம் ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை க்கான விண்ணப்பங்களும், நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பால்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் பெற்று கொண்டு ஆவன செய்து கொடுப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஶ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் மோகன் ராஜ், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இசை சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், கேமலாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா ஷர்மிளா, துணைத்தலைவரும், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. பொருளாளருமான ஹாஜா உதுமான், ஆழ்வை மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசாருதீன், கிளை பிரதிநிதி சிந்தா பகர்தீன், ஜமாத் தலைவர் அப்துல் காதர், காண்டிராக்டர் சைமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News