உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனியில் பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடப்பதால் நோயாளிகள் அவதி

Published On 2022-08-18 05:09 GMT   |   Update On 2022-08-18 05:09 GMT
  • அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த மயில் ரவுண்டானா எனப்படும் பஸ் நிலைய பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர்.
  • போராட்டம் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக உள்ள பழனி சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க வருகை தருகின்றனர்.

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த மயில் ரவுண்டானா எனப்படும் பஸ் நிலைய பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

அவசர சிகிச்சைக்காக வருபவர்களும், உயிருக்கு போராடிக் கொண்டு ஆம்புலன்சில் வருபவர்களும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவசர சிகிச்சை வார்டு மற்றும் பிரசவ வார்டு அமைந்துள்ள பகுதியின் பின்புறம்தான் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது மட்டுமின்றி அரசு ஆஸ்பத்திரியை சுற்றி ஏறி போராட்டக்காரர்கள் அமர்ந்து கொள்வதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பழனியில் பஸ்நிலையத்தை தவிர்த்து வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News