உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள் குறைதீர்ப்பு முகாம்

Published On 2023-02-24 09:27 GMT   |   Update On 2023-02-24 09:27 GMT
  • 2.0 மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்’ என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
  • சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.

ஊட்டி,

ஊட்டி மாவட்ட அலுவலகம் அமலாக்க அதிகாரி மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் சட்டரீதியாக இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் 'நிதி ஆப்கே நிகட் 2.0 - மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாம்' என்ற திட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.

இது ஒரு ஒத்திசைவான, விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையாக இருக்கும், இது குறை தீர்க்கும் தளமாகவும், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தகவல் பரிமாற்ற மேடையாகவும் செயல்படும்.

நீலகிரி மாவட்டத்திற்கான 'நிதி ஆப்கே நிகட் 2.0' வருகிற 27-ந் தேதி தோட்டக்கலை வளாகம் சார்ரிங் கிராஸ், ஊட்டி என்ற முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த மாவட்ட விழிப்புணர்வு மற்றும் குறை தீர்க்கும் முகாமின் ஒரு பகுதியாக, வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம் 1952, அதன் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்கள், தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதலாளிகள், முதன்மை முதலாளிகள்*, ஒப்பந்ததாரர்களுக்குக் கிடைக்கும் ஆன்லைன் சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படும்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் புதிய முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பரப்பும் தளமாகவும் அமையும்.

தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் கவனித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்கள்.

நிதி ஆப்கே நிகட்டில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலாளர்கள், முதலாளிகள் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


 

Tags:    

Similar News