உள்ளூர் செய்திகள்

பார்வை திறன் குறையுடைய மாணவர்களுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்.

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published On 2022-09-05 10:30 GMT   |   Update On 2022-09-05 10:30 GMT
  • படிப்பு தான்வாழ்க்கை யை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.
  • ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தஞ்சாவூர்:

ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்களும் பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும்பரிசுகளும் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

படிப்பு தான்வாழ்க்கையை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.

பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப்போட்டி, நடனம், சதுரங்கம்உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் போக்கு வரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா, தொழிலதிபர் நார்த்தாங்குடி பாலசுப்ரம ணியன், பார்வை திறன்கு றையுடை யோருக்கான அரசு மேல்நிலை பள்ளி முதல்வர் சோபியா, ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News