ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கல்
- மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
- மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.
இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.