உக்கடம் பஸ் நிலையத்தில் பயன்படாத கழிப்பறையால் பொதுமக்கள் விரக்தி
- காந்திபுரம் பஸ் நிலையம் அமைப்பதற்கு அடுத்ததாக உக்கடம் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது
- 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து ஏறி மற்றும் இறங்கி செல்கின்றனர்.
குனியமுத்தூர்.
கோவை உக்கடம் பஸ் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். காந்திபுரம் பஸ் நிலையம் அமைப்பதற்கு அடுத்ததாக உக்கடம் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொள்ளாச்சி, பழனி, மதுரை, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு இங்கு இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து ஏறி மற்றும் இறங்கி செல்கின்றனர்.
இந்த உக்கடம் பஸ் நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. உக்கடம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் அதனை உபயோகப்படுத்துகின்றனர். ரூ.5 கொடுத்து கழிப்பினை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை ஒட்டி ஒரு கழிப்பறை கட்டிடம் உள்ளது. கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வரை மாற்றுத்திறனாளிக்காக கோவை மாநகராட்சி சார்பில் இந்த கழிப்பறை செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது செயல்பாடு இல்லாத நிலையில் பூட்டியே உள்ளது. இதனால் வழக்கமாக இதனை பயன்படுத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் தற்போது அதனை பயன்படுத்தத முடியாமல் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- கோவை மாநகராட்சி பொருத்த அளவில் அருகிலேயே காசு வாங்கிக்கொண்டு கழிப்பறைக்கு செல்லும் வசதி தற்போது இயங்கி வருகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இதனை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு கொடுத்தால் மாநகராட்சிக்கு எந்த லாபமும் கிடையாது. அதனால்தான் பூட்டிய நிலையில் உள்ளது. வருமானத்தை மட்டுமே கவனம் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் உபயோகப்படும் காரனியை மாநகராட்சி கையில் எடுத்தால் அது அனைவருக்கும் சாத்தியமாகும்.
எனவே கோவை மாநகராட்சி மக்கள் நலனில் கருத்தில் கொண்டு இந்த கழிப்பறையை விரைந்து செயல்பட நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் பயன்படும். மேலும் இந்த கழிப்பறை முன்பு ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதால் பொதுமக்களின் பார்வையில் இந்த கழிப்பிடம் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே கோவை மாநகராட்சி உடனே இதில் தலையிட்டு, பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை செயல்பட வைத்தால் அனைத்து பயணிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.