உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்-நாளை நடக்கிறது
- அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் மனு அளிக்கலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், அனைத்து டி.எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புகார் மனு அளிக்கலாம். மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.