ரேசன் கடை கட்டிட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- 6 மாதங்களை கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 மாதங்களைக் கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து ரேஷன் பொருட்களை தூக்கி வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அங்காடி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.