பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றவும்-கோவை எஸ்.பி அறிவுரை
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
- குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று நிருப ர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-
தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக மாக இருப்பதாகவும், நீங்கள் ரூ 85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் அவரை நேரில் சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
இதனை நம்பியே பிரகாஷ் கடந்த 10-ந்தேதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணத்துடன் பொள்ளா ச்சிக்கு சென்றார். அப்போ துதான் இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக குற்ற வாளிகளை பிடிக்க வால்பாறை சரக டி.எஸ்.பி. கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.
தனிப்படை போலீசார் குற்றவாளிகள் பயன்ப டுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரி த்தனர்.
விசாரணையில் இந்த கும்பல் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீ சார் அங்கு விரைந்து சென்று பெண் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம், 2 கார்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.
சம்பவம் நடை பெற்ற 12 மணி நேரத்தில் குற்ற வாளிகள் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்து ள்ளது. வங்கியிலேயே பணத்தை மாற்ற வேண்டும். எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமார வேண்டாம்.
இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரியிடம் கேட்டுள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.தொடர்ந்து குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீ சாரை பாராட்டி பாராட்டு சான்றி தழ் மற்றும் ஊக்க தொகையையும் வழங்கினார்.