புதுக்கோட்டையில் 45 நாட்கள் பசுமை பூமிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
- புதுக்கோட்டையில் 45 நாட்கள் பசுமை பூமிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
- இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார்.
புதுக்கோட்டை,
இளையோர் அமைப்பை சார்ந்த இளைஞர்கள், சூழலியல்உரிமைக்கான இளையோர் அமைப்பு, புதுக்கோட்டை ரோஸ் நிறுவனம், டி.டி.எச், ஆர்.எல்.ஹச்.பி சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு 45 நாட்கள் பசுமை பூமிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மரம் நடுதல், விதைப்பந்து தூவுதல், நீராதாரங்களில் உள்ள பிளாஸ்டி கழிவுகளை அப்புறப்படுத்துதல், ஓவிய ங்கள் வரைதல், துணி பைகள் வழங்கதல், விழிப்பு ணர்வு பிரச்சாரம், கையெ ழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தன.
குண்ணன்டா ர்கோவில், அன்னவாசல் போன்ற ஒன்றியங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களில் 700க்கும் மேற்பட்ட இளையோர் மற்றும் குழந்தைகள் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஓனாங்கு டியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அப்போது ஊராட்சி முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையை அடுத்த அரிமளத்தில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அமைப்பின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். ரோஸ் நிறுவன இயக்குனர் ஆதப்பன், அரிமளம் நர்சரி உழவர் உற்பத்தியாளர் நிறுவன வேலாயுதம், ரோஸ் பணியாளர்அகிலா விஜயா, சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய அலுவலர் விமலா, சூழலியல்உ ரிமைக்கான இளையோர் அமைப்பின் சத்யா, சங்கீதா, பத்மினி உள்ளிட்ட ஏராளமானவ ர்கள் கலந்து கொண்டனர்.