உள்ளூர் செய்திகள்

ரூ.1.59 கோடி மதிப்பிலான விதை கடலை விற்பனை செய்ய தடை

Published On 2022-11-16 06:53 GMT   |   Update On 2022-11-16 06:53 GMT
  • ரூ.1.59 கோடி மதிப்பிலான விதை கடலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரிகள் ஆய்விற்குப்பின் நடவடிக்கை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர்.

இதையடுத்து, ஆலங்குடியில் விதைக்கடலை வியாபாரம் களைகட்டி உள்ளது. அதே வேளையில், தரமில்லாத விதைக் கடலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விதை ஆய்வு துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆலங்குடியில் விதைக்கடலை விற்பனை செய்யும் கடைக ளுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆந்திரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந் து கொண்டு வந்து, சான்று அட்டைகள் இல்லாத, தரமில்லாத கடலை களை விதைக் கடலையாக விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.59 கோடி மதி ப்புள்ள 156 டன் கடலைகளை விற்பனை செய்ய தடை விதித்தும், சா ன்று பெற்று விற்பனை செய்யுமாறும் விற்பனையாளர்களுக்கு அலு வலர்கள் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News