கராத்தே தகுதிப்பட்டை வழங்கும் விழா
- 120க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி
- 5வது ஆண்டு தகுதிப்பட்டை வழங்கும் விழா
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் பகுதியில் தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதி பட்டை வழங்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, காவி, கருப்பு ஆகிய நிறங்களில் தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 5-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் பள்ளித்தாளாளர் அருளரசு தலைமை வகித்தார். தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்து தகுதிப்பட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிராங்கோ எடின், தேர்வு நடத்துனர் சண்முகம், ஒன்றியத் தலைமை பயிற்சியாளர் சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் சோமசுந்தரம், ராசப்பா, ஆனந்த், ரமேஷ், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.