உள்ளூர் செய்திகள்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

Published On 2023-01-23 05:47 GMT   |   Update On 2023-01-23 05:47 GMT
  • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
  • அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தினமான வரும் 26-ந் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம், மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை ெதரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.







Tags:    

Similar News