எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு-மோதல்
- எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு-மோதலில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
எடப்பாடி:
எடப்பாடி நகராட்சி கூட்டம் இன்று காலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
நகரமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து விவரம் வாசிக்கப்பட்ட பொழுது, பூலாம்பட்டி குடிநீர் உந்து நிலையத்தில், மின்மோட்டார் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை வாசித்த நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முற்பட்டனர். அப்போது அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து தி.மு.க. வினர் எடப்பாடி நகராட்சியில் பல்வேறு நிதி ஈடுபடுவதாகவும் ,அதுகுறித்த விவரங்களை கோரும் தங்களை தாக்க வருவதாகவும் இதற்கு தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்கும் வரை நகர மன்ற கூட்ட அரங்கிலிருந்து வெளியேறப் போவதில்லை என அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.