உள்ளூர் செய்திகள்

செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாதாக்கோட்டையில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-30 10:01 GMT   |   Update On 2023-01-30 10:01 GMT
  • நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.சி.ஏ. ( மிருகவதை வதை தடுப்பு சங்கம் ) சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

இதில் செல்லப்பிராணி களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாதாக்கோ ட்டையில் எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரக்கூடிய நாட்களில் நாய் ஷோ நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

நகராட்சிக்கு சமமான அளவில் இந்த ஊராட்சி விளங்குகிறது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது. அதன் பிறகு சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ் செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News