உள்ளூர் செய்திகள்

பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்மழையால் நிரம்பும் அணைகள்: பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-11-09 07:07 GMT   |   Update On 2023-11-09 07:07 GMT
  • பழனி பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
  • தினந்தோறும் 20 கனஅடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பழனி:

திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலைவரை விட்டு விட்டு மழை பெய்ததால் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. ஏற்கனவே 64 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுக்கொள்ள ளவை எட்டி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் தற்போது 69 அடி தண்ணீர் உள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் பழனி பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்றுமுதல் மார்ச் 17ம் தேதிவரை தினந்தோறும் 20 கனஅடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தாடாகுளம் முதல்போக பாசன பரப்பான 844 ஏக்கருக்கு திறந்துவிடப்ப ட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிரவரப்படி 65 அடி உயரமுள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் 52 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதாலும், மேலும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட த்தில் நேற்று ஒரே நாளில் 192 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டு க்கல் 32, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 42.5, நிலக்கோட்டை 27, பிரையண்ட் பூங்கா 53, நத்தம் 36.5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News