கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவியும் திராட்சை- வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
- பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
போரூர்:
திராட்சை பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு 4 வகையான திராட்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் இருந்து 10 முதல் 12 லாரிகளில் சுமார் 150டன் வரை திராட்சை பழங்கள் தினசரி குவிந்து வருகிறது. இதில் சோனா எனப்படும் விதையில்லா பச்சை திராட்சை அதிகளவில் குவிந்து வருவதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
இதேபோல் விதையில்லாத கருப்பு திராட்சை (கல்பனா) ரூ.90, விதையில்லாத பச்சை திராட்சை (சோனா) ரூ.50, ஜூஸ் திராட்சை ரூ.50, ரெட் குளோப் திராட்சை ரூ.130 விற்பனை ஆகிறது. விலை குறைந்து உள்ளதல் வியாபாரிகள் அதிக அளவில் திராட்சைகள் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதனால் மார்க்கெட்டில் திராட்சை விற்பனை களைகட்டி உள்ளது.