உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதிப்பட்டியலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார். 

11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள்

Published On 2023-09-01 07:47 GMT   |   Update On 2023-09-01 07:47 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
  • 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறி வுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோ சனைக்கூட்டம் அங்கீ கரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத் தில், ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 வாக்காளர்கள் (ராணுவத்தில் பணிபுரிப வர்கள்) என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர்.

கிராமப் பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங் களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்பது 1500 வாக்குகளுக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து 4 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சா வடிகளின் இறுதி பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுக ர்களுக்கு வழங்கி னார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News