ராமேசுவரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
- ராமேசுவரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
- தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இந்தியாவின் தேசிய புனிதத் தலமாகவும் சுற்றுலாப் பகுதியாகவும், இருந்து வரு கிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். மேலும், விடுமுறை நாள்கள், அமாவாசை நாள்க ளில் ஆயிரக்கணக்கா னோா் வந்து செல்கின்றனா். பாம்பன் ெரயில் பாலம் சேதமடைந்த நிலையில் ராமேசுவரத்துக்கு ெரயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது.
இதனால் ெரயில்களில் வந்து கொண்டிருந்த 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பயணி கள் தற்போது ராமநாதபுரத்தி லிருந்து ராமேசுவரத்துக்கு வருவதற்கு அரசு பஸ், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள் ளது. தனியாா் பஸ் வசதி இல்லாத நிலையில், முழு மையாக அரசு பஸ்களை நம்பி பய ணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இதே போல, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களின் சொந்த பணி, வியாபாரம், மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக ராம நாதபுரத்துக்கு வந்து செல் கின்றனா்.
ராமேசுவரத்தி லிருந்து ராமநாதபுரத்துக்கும்,
ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கும் இயக்க படும் பஸ்கள் வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப் படுவதால், ஒவ்வொரு பஸ் சிலும் 80 முதல் 90 போ் வரை கடும் நெடுக்கடிக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
இதனால், ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர் கள் கோரிக்கை விடுத்தனா்.